UPDATED : ஏப் 14, 2025 12:40 PM | ADDED : ஏப் 14, 2025 12:37 PM
சென்னையில் நடைபெற்ற கார் மற்றும் பைக் சாகச காட்சிகள் மெய்சிலிர்க்க செய்தது.'ரெட்புல் மோட்டோ ஜாம்' என்ற தலை்பில் நடைபெற்ற இந்த சாகச நிகழ்ச்சியில் முதலில் நான்கு சக்கர ஜீப்பை இரண்டு சக்கரத்தில் ஒட்டிக்காண்பித்தனர்.
பின்னர் மோட்டார் சைக்கிளில் உயரே பறந்து சென்று கிழே இறங்கி வருவதை பல கோணங்களில் செய்து காட்டினர்,மூன்று வீரர்கள் அடுத்தடுத்து செய்துகாட்டிய இந்த நிகழ்வு பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. சில பார்வையாளர்களும் வேகமாக செல்லும் கார்களில் அமர்ந்து சென்று அந்த திரில்லிங் அனுபவத்தைப் பெற்றனர்.
சினிமா இயக்குனர் லோகேஷ் சிறப்பு விருந்தினராக நிகழ்வில் பங்கேற்று அவரும் பந்தயக்காரில் பயணித்தார்.சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்வை திரளான பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.-எல்.முருகராஜ்