உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / பொக்கிஷம் / சென்னையை மிரட்டிய பார்முலா கார் பந்தயம்

சென்னையை மிரட்டிய பார்முலா கார் பந்தயம்

நடக்குமா..நடக்காதா..கார் பந்தய மைதானத்தில் ஓடுமா? ஓடதா?என்ற பலவித குழப்பங்களைத் தாண்டி வெற்றிகரமாக சென்னையில் இரவு நேர பார்முலா 4 கார் பந்தயம் நடந்தேறியுள்ளது.இரண்டாயிரம் ரூபாய் ஆரம்ப டிக்கெட் என்றால் கூட பராவாயில்லை என்று மக்கள் வாங்கி வந்து பார்த்து ரசித்தனர்.சர்வதேச போட்டி என்பதால் பயங்கர கெடுபிடி,பத்திரிகையாளர்கள் படம் எடுப்பதற்கு கூட நிறைய தடைகள் அந்த தடைகளை எல்லாம் தாண்டி தமிழக பத்திரிகையாளர்கள் தங்களது திறமைகளை நிரூபித்தனர்.மைதானத்திற்கு ஒரு நாய் நுழைந்தால் கூட போட்டியை நிறுத்திவிட்டு அந்த நாய் பிடிபட்ட பிறகே போட்டியை மீண்டும் நடத்தினர்,இதற்காக மைதானத்தை சுற்றிலும் நாயை பிடிக்க நிறைய பேர் வலையுடன் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தனர்.இதன் காரணமாக போட்டி நள்ளிரவைத்தாண்டியும் நீடித்தது.இரவை பகலாக்கும் விதத்திலான விளக்கொளியில் வேகமெடுத்துச் சென்ற கார்களையும் அது தந்த சத்தமும் படு திரில்லான அனுபவம்தான்.-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை