UPDATED : மே 14, 2025 04:27 PM | ADDED : மே 14, 2025 04:24 PM
பெரும்பாலும் தென்மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் முதலில் தஞ்சமடைவதும் பின் தங்கள் வாழ்க்கையை விருத்தி செய்து கொள்வதும் வடசென்னையில்தான்..
அப்படி வரும்போது தங்கள் பராம்பரியத்தையும் ஊர் திருவிழாவினையும் சேர்த்தே கொண்டு வந்து விடுவர்,இதன் காரணமாக அம்மனை வழிபடும் கிராமத்து திருவிழா அதே கிராமீய பாணியில் வடசென்னையில் அதிகம் நடந்துவருகிறது.
அந்தவகையில் வடசென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அருட்கோட்டம் முருகன் கோவில் சித்ரா பவுர்ணமி விழாவன்று ஐயாயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் பால்குடம்,காவடி எடுத்துவந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.அது மட்டுமின்றி இரண்டாயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் அலகு குத்தியும்,ராட்சத வேல் ஏந்தியும், கூண்டுவேல் தாங்கியும், மணி வேல் சுமந்தும், பறவை காவடி எடுத்தும், ஊர்வலமாக வந்தனர்.தொடர்ந்து அருட்கோட்டம் முருகனுக்கு நடந்த பாலாபிேஷகத்தில் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
படங்கள்:லட்சுமணன்