உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / பொக்கிஷம் / அமிர்தசரஸின் மணிமகுடம் பொற்கோவில்

அமிர்தசரஸின் மணிமகுடம் பொற்கோவில்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் அமைந்துள்ள ஹர்மந்திர் சாகிப் எனப்படும் பொற்கோவில், சீக்கியர்களின் மிகப் புனிதமான ஆன்மீகத் தலமாகும். குரு நானக் தேவ்ஜியால் தொடங்கி வைக்கப்பட்ட சீக்கிய நெறிமுறைகளின் படி, சமத்துவம், மனிதநேயம் மற்றும் பக்தி ஆகியவற்றின் உன்னத அடையாளமாக இக்கோவில் விளங்குகிறது.இக்கோவிலின் கட்டுமானப் பணிகளை நான்காவது சீக்கிய குருவான ஸ்ரீ குரு ராம் தாஸ்ஜி தொடங்கினார். 'அமிர்தசரஸ்' என்ற பெயரே 'அமிர்தத்தின் திருக்குளம்' என்று பொருள்படும் 'அமிர்த சரோவர்' என்ற குளத்தின் பெயரிலிருந்துதான் உருவானது.இக்கோவிலின் அடித்தளத்தை ஒரு முஸ்லிம் துறவியான ஹஸ்ரத் மியான் மிர் மூலம் குரு அர்ஜன் தேவ்ஜி 1588 ஆம் ஆண்டில் நாட்டினார். இது சீக்கிய மதத்தின் மத நல்லிணக்கக் கொள்கையை உலகிற்குப் பறைசாற்றுகிறது.பிற்காலத்தில், மகாராஜா ரஞ்சித் சிங் இக்கோவிலின் மேல் பகுதிகளைத் தூய தங்கம் மற்றும் தாமிரக் தகடுகளால் வேய்ந்தார். இதனால் இஸ்தலத்திற்கு 'பொற்கோவில்' என்ற பெயர் பெற்றது.இக்கோவிலின் நான்கு திசைகளிலும் நான்கு நுழைவாயில்கள் உள்ளன. சாதி, மதம், இனம், பாலினம் மற்றும் சமூக அந்தஸ்து பாராமல் உலகின் அனைத்து மூலைகளில் இருந்தும் அனைத்து மக்களும் இங்கு வரலாம் என்பதை இது குறிக்கிறது.கோவிலைச் சுற்றியுள்ள திருக்குளம் ஆன்மீகத் தூய்மையைக் குறிக்கிறது. பக்தர்கள் இதில் நீராடுவது ஆன்மீகச் புத்துணர்வைத் தரும் என்று நம்பப்படுகிறது.இங்கு உலகின் மிகப்பெரிய இலவச சமுதாயச் சமையல் கூடம் இயங்குகிறது. ஜாதி மத பேதமின்றி தினமும் லட்சக்கணக்கான மக்களுக்கு எந்தவித பாகுபாடும் இல்லாமல் இலவசமாக உணவு பரிமாறப்படுகிறது. இது சமத்துவத்தின் மிகச்சிறந்த உதாரணமாகும்.சீக்கியர்களின் புனித நூலான 'குரு கிரந்த் சாகிப்' இங்குள்ள பிரதான மண்டபத்தில் நிரந்தரமாகப் பாதுகாக்கப்பட்டு, குருவாக மதிக்கப்பட்டு ஓதப்பட்டு வருகிறது.குரு ராம் தாஸ்ஜியின் பிறந்த நாள் விழா போன்ற சிறப்பு நாட்களில் பொற்கோவில் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பக்திப் பரவசத்துடன் கொண்டாடப்படுவது வழக்கம்.இப்போது இந்த நிகழ்வு வெகு விமரிசையாக நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !