உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / பொக்கிஷம் / தமிழ் முகங்களை காண அழைக்கிறார் நியா

தமிழ் முகங்களை காண அழைக்கிறார் நியா

.நியா ஜெராகேரளாவைச் சேர்ந்தவர், அங்குள்ள அரசு அலுவலகத்தில் வேலை பார்த்துவருகிறார்.இவருக்கு பயணம் செய்து பயணக்கட்டுரை எழுதுவதும்,புகைப்படம் எடுப்பதும் பிடித்த பொழுதுபோக்கு.தமிழகத்தில் பயணம் செய்த போது எடுத்த பெண்களின் புகைப்படங்களை தொகுத்து சென்னை கீரீம்ஸ் ரோட்டில் உள்ள லலித்கலா அகாடமியில் 'தமிழ் முகம்' என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சியை நடத்திவருகிறார்.பெரும்பாலும் உழைக்கும் தெருவோர வியாபரம் செய்யும் பெண்களின் முகங்களை பதிவு செய்துள்ளார் ஒவ்வொரு முகத்திலும் வறுமையைத்தாண்டிய மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தெரிகிறது.கண்காட்சி குறித்து நியா கூறுகையில்,உலகின் மகிப் பழமையான நாகரிங்கள் நிறைந்து விளங்கும் பிரதேசங்களில் தமிழ்நாடும் ஒன்று.கலை இலக்கியம் பராம்பரியம் ஆகியவற்றை அடிப்டையாகக் கொண்ட கலாச்சார மையமாக தமிழகம் சிறப்புற்று விளங்குகிறது மேலும் இதன் இளமை துடிப்பு மொழியில் இசையில் நடனத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது. விருந்தோம்பல்,மனிதாபிமானம் மற்றும் இயற்கையை நேசிக்கும் மாமனிதர்கள் நிறைந்த இந்த மண்ணில் நான் எடுத்த பெண்களின் புகைப்படங்களை தொகுத்துள்ளேன் என்றார்.வருகின்ற 23 ஆம் தேதி வரை கண்காட்சி நடைபெறும்,பார்வை நேரம் பகல் 11 மணி முதல் இரவு 7 மணிவரை,அனுமதி இலவசம்.-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை