உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / பொக்கிஷம் / நாளை உலக புகைப்பட தினம்

நாளை உலக புகைப்பட தினம்

நாளை உலக புகைப்பட தினம்மெட்ராஸ் போட்டோகிராபி சொசைட்டி கண்காட்சி நடத்துகிறது.சென்னையில் உள்ள பழமையான புகைப்பட அமைப்பான 'மெட்ராஸ் போட்டோகிராபி சொசைட்டியும்',ஜெய்கோபால் கரோடியா போட்டோ ஜர்னலிசம் அகடாமியும் இணைந்து உலக புகைப்பட தினத்தைக் கொண்டாடும் வகையில் நாளை (19/08/2025)புகைப்படக் கண்காட்சியினை நடத்துகின்றனர்.சர்வதேச புகைப்பட தினம் என்பது கேமராவின் பின்னால் இருக்கும் படைப்பாளிகளை கவுரவிக்கும் நாளாகும். “ஒரு படம் ஆயிரம் சொற்களுக்குச் சமம்” என்ற பழமொழியை உண்மையாக்கும் புகைப்படங்களை கொண்டாடும் நாளும் இதுவே.புகைப்படக் கலை 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து, மனிதர்களின் நினைவுகள், வரலாறு, கலாச்சாரம், மற்றும் உணர்ச்சிகளைப் பதிவு செய்யும் சக்திவாய்ந்த கருவியாக இருந்து வருகிறது.-ல் பிரான்சில் ஜோசப் நிசேபோர் நியெப்ஸ் என்பவர் 'ஹெலியோகிராபி' எனப்படும் முறையில் உலகின் முதல் புகைப்படத்தை எடுத்தார்.பின்னர் லூயி டாகியர் உருவாக்கிய டாகியரோடைப் முறை 1839-ல் பொதுவாக அறிவிக்கப்பட்டது.அதனால், 1839 ஆகஸ்ட் 19 ஆம் தேதி பிரான்ஸ் அரசு இந்த கண்டுபிடிப்பை உலகுக்கு பரிசாக அறிவித்தது. அந்த நாளே உலக புகைப்பட தினமாக கொண்டாடப்படுகிறது.இந்த நாளை மெட்ராஸ் போட்டோகிராபி சொசைட்டி தனது உறுப்பினர்கள் எடுத்த புகைப்படங்களுடன் கண்காட்சி நடத்தி கொண்டாட திட்டமிட்டுள்ளது.சென்னை அண்ணாநகரில் உள்ள ஜெய்கோபால் கரோடியா பள்ளி வளாகத்தில் 29 உறுப்பினர்கள் எடுத்த 125 புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட உள்ளது.வைல்டு லைப்,போட்டோ ஜர்னலிசம்,பேர்ட்ஸ் போட்டோகிராபி,லேண்ட்ஸ் போட்டோகிராபி,ஸ்போர்ட்ஸ் போட்டோகிராபி என்று பல்வேறு தலைப்புகளில் படங்கள் இடம் பெற்றுள்ளது.கல்லுாரிகளில் விஷ்வல்கம்யூனிகேஷன் படிப்பு படிக்கும் மாணவ,மாணவியர்களுக்கு இந்த புகைப்படங்கள் பாடமாக இருக்கும்.இந்த கண்காட்சி நாளை மாலை 5 மணிக்கு சென்னையின் மூத்த புகைப்படக்கலைஞர் ஜெயானந்த கோவிந்தராஜ் திறந்துவைக்கிறார்.கண்காட்சி தொடர்ந்து வருகின்ற சனிக்கிழமை வரை நடைபெறும், துவக்க நாளிலும்,தொடர்ந்து பள்ளி நாட்களிலும்(10-5) பார்வையாளர்கள் கண்காட்சியைக் காண இலவசமாக அனுமதிக்கப்படுவர்.மேற்கண்ட தகவலை கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் அழகானந்தம்,மற்றும் அசோக் கேடியா தெரிவித்துள்ளனர்.-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ