உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / சிந்தனைக் களம் / பாதுகாப்பான பயணம் இனி உத்தரவாதம்

பாதுகாப்பான பயணம் இனி உத்தரவாதம்

போகும் இடத்துக்கு வேகமாகச் செல்ல வேண்டும் என்ற உந்துதல் இல்லாதவர்கள் குறைவானவர்கள்தான். ஆட்டோ, கார், லாரி, டிரக் என வாகனங்கள் கவனத்துடன் இயக்கப்படுகிறதா என்றால் கேள்விக்குறிதான். விபத்துகள், தவறுகள் நிகழ்கின்றன. வாகனத்திற்குள் 'டேஷ் கேமரா' இருந்து அவற்றின் மூலம் கண்காணிக்க முடிந்தால் எப்படி இருக்கும்? இது பல 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களால் நிஜமாகியிருக்கிறது.பாதுகாப்புக் கவலைகள் பொதுப் போக்குவரத்தில் பயணிகள் எதிர்கொள்ளும் சவால்களை மேலும் கூட்டுகின்றன. பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதிக்கும் குற்றங்கள் மற்றும் துன்புறுத்தல்கள் குறிப்பிடத்தக்க கவலையாக உள்ளது. சவால்களை திறம்பட எதிர்கொள்ள வீடியோ கண்காணிப்பு ஒரு சக்திவாய்ந்த கருவியாக வெளிப்படுகிறது.

மலிவு விலை 'டேஷ் கேமரா'

பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட 'காஷியோ' (Cautio) என்ற 'ஸ்டார்ட் அப்' நிறுவனம், வாகன ஓட்டிகளுக்கான பாதுகாப்பை மேம்படுத்தவும், வருவாய் இழப்பு மற்றும் சாலை விபத்துகளைக் குறைக்கவும் மலிவு விலையில் 'டேஷ் கேமரா'க்களை உருவாக்கிறது. இதன் மூலம், நிகழ்நேர காட்சி கண்காணிப்பை செயல்படுத்த முடியும். டிரைவரின் நடத்தை, ஓட்டும் முறைகள், போக்குவரத்தில் உள்ள பொருட்களின் நிலையை தொலைவிலிருந்து கண்காணிக்க இயலும்.

பயணிகளின் விருப்பம்

வாகனங்களில் புகையைக் கண்டறிதல், சீட் பெல்ட் அணியாதது மற்றும் டிரைவரின் மொபைல் போன் பயன்பாடுகள் போன்றவற்றுக்கு விழிப்பூட்டல் வழங்குவதோடு, டிரைவரின் கவனச் சிதறல் மற்றும் சோர்வுக்கான அறிகுறிகளை உடனடியாக எடுத்துச் சொல்கிறது. இதன் மூலம், அனைவரின் பாதுகாப்பை உறுதி செய்ய முடிவதோடு, சாலையில் எந்த பிரச்னையும் ஏற்படாமல் இருக்கவும் உதவுகிறது. வாகனத்தில் கேமராக்கள் இருப்பதை அறிந்த பயணிகள் இதுபோன்ற வாகனங்களில் பயணம் செய்ய விரும்புகின்றனர்.'டேஷ் கேமராக்கள்' பொருட்கள் வந்தவுடன் அவற்றின் நிலையைப் பற்றிய காட்சி ஆதாரங்களை வழங்குகிறது. இது வினியோகத்துக்கான சான்றாக செயல்படுகிறது; சேதமடைந்த அல்லது காணாமல் போன பொருட்களின் சர்ச்சைகள் அல்லது உரிமைகோரல்களை தீர்க்கவும் உதவுகிறது.இணையதளம்: www.cautio.in; இ மெயில்: cautio.inஉங்கள் சந்தேககங்களுக்குஇ மெயில்: sethuraman.gmail.comஅலைபேசி: 98204-51259இணையதளம்www.startupbuisnessnews.com- சேதுராமன் சாத்தப்பன் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை