உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / சிந்தனைக் களம் / காலத்தின் கட்டாயத்திற்கு அடிபணிந்த சீனா

காலத்தின் கட்டாயத்திற்கு அடிபணிந்த சீனா

பிரிக்ஸ் மாநாட்டையொட்டி, ரஷ்யாவின் கசானில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஷீ ஜின்பிங் இடையே, அக்டோபர் 24-ம் தேதி நடந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட முடிவின்படி, சீன தலைநகர் பீஜிங்கில், நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியும், கடந்த 18 ல், 23வது சிறப்பு பிரதிநிதிகள் கூட்டம் நடத்தினர். எதற்காக இந்த சந்திப்பு என்பதை விளக்கவே இந்த கட்டுரை.இந்தியா -- சீன எல்லை பிரச்னைகள் மற்றும் சரித்திரம்: இந்தியா- - சீன எல்லை பிரச்னை, 1962 போருக்குப் பின் தீவிரமடைந்தது. பிரமாண்டமான 3,488 கி.மீ., எல்லை வரம்பு, இரண்டு நாடுகளுக்கும் இடையே தெளிவற்றதாகவும், சர்ச்சைக்குரியதாகவும் இருந்து வருகிறது.முக்கியமாக, அருணாச்சலப் பிரதேசம் (சீனாவின் கருத்தில் 'தெற்கு திபெத்') மற்றும் அக்சாய் சின் பகுதி தொடர்பான உரிமை, இம்மோதல்களுக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது.கடந்த 2020ல் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு மோதல், இருதரப்புக்கும் பேரதிர்வை ஏற்படுத்தியது. இந்த சண்டையில் நம் ராணுவ வீரர்கள், 50க்கும் மேற்பட்ட சீன வீரர்களை துவம்சம் செய்தனர்; 20 ராணுவ வீரர்களை நாம் இழந்தோம். இந்த நிகழ்வு, இரு நாடுகளுக்கிடையிலான நம்பிக்கையின்மையை அதிகரித்து, எல்லையில் அனுதினமும் பதற்றத்தை உருவாக்கியது.இதைத் தொடர்ந்து, ராணுவ கமாண்டர் மட்டத்திலும், வெளியுறவுத் துறை மட்டத்திலும் பல சுற்று பேச்சுகள் நடைபெற்றன. சில மோதல் பகுதிகளில் விலகல்களைப் பெற்றாலும், எல்லை பிரச்னைகள் இன்னும் முழுமையாக தீர்க்கப்படவில்லை.இந்த பிரச்னைகள் இந்திய- - சீன உறவுகளை மட்டுப்படுத்துவதோடு, பிராந்திய அமைதிக்கும் பெரும் சவாலாக விளங்குகின்றன. எல்லை விவகாரங்களில், நீடித்த தீர்வுகளைத் தேடுவது, காலத்தின் தேவையாக உள்ளது. இந்நிலையில், அஜித் தோவலின் சீன விஜயம், மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.இந்த விஜயத்தின் முக்கிய நோக்கம், எல்லை விவகாரங்களில் நம்பிக்கை வளர்த்தல், பரஸ்பர நம்பிக்கையை உருவாக்குதல் மற்றும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்தலாகும்.இந்த சந்திப்பு பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது; குறிப்பாக பல ஆண்டுகளுக்குப் பிறகு எல்லை பிரச்னைகள் தொடர்பான சிறப்புப் பிரதிநிதிகள் சந்திப்பு மீண்டும் துவங்கப்பட்டது.

முக்கிய அம்சங்கள்

1நம்பிக்கையூட்டும் வகையில் எல்லையை மேம்படுத்துதல்: இந்தியா மற்றும் சீன எல்லையில் நிலையான அமைதி மற்றும் நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகளை மேம்படுத்துவதிலும், ஒப்பந்தத்திற்கான வழியையும் ஏற்படுத்தி உள்ளது2 கைலாஷ் மானசரோவர் யாத்திரையை மீண்டும் துவங்குதல்: இந்திய யாத்ரீகர்களின் கைலாஷ் மானசரோவர் புனித பயணத்தை மீண்டும் தொடங்க, இரு தரப்பும் ஆர்வம் வெளியிட்டுள்ளன3 சிறப்புப் பிரதிநிதிகள் சந்திப்பு: நிலையான அமைதியை, எல்லைப்புறத்திலும், இரு நாடுகளிடையேயும் ஏற்படுத்துவதற்கு சிறப்புப் பிரதிநிதிகள் சந்திப்பை மேம்படுத்த, இரு தரப்பிலும் ஆர்வம் காட்டப்பட்டுள்ளது4 வர்த்தகம் மற்றும் கலாசார பரிமாற்றங்கள்: எல்லை தாண்டிய நதிகள் மற்றும் நாதுலா எல்லை வழியாக வர்த்தகத்தை எளிதாக்கவும், இருதரப்பு வர்த்தகம் மற்றும் கலாசார பரிமாற்றங்களை மேம்படுத்தவும் இருதரப்பும் முடிவு செய்துள்ளன.5 முந்தைய மோதல்களின் நிலைமாற்றம்: கிழக்கு லடாக்கில் கல்வான் மோதலின் பின்னணி மற்றும் மோதல் பகுதிகளில் விலகல்களுக்கான முன்னேற்றங்களை மேலும் துரிதப்படுத்த விவாதிக்கப்பட்டுள்ளது.

சந்திப்பின் பலன்

இந்தோ- - பசிபிக் பகுதி யில் இந்திய- - சீன உறவுகளின் தாக்கம் முக்கியத்துவம் வாய்ந்தது. அஜித் தோவலின் விஜயம், இரு நாடுகளுக்கிடையிலான புரிதல் இடைவெளியை குறைத்து, சந்தேகங்களை நீக்குவதற்கான ஒரு வாய்ப்பாக மாறியுள்ளதுஉச்ச மட்டத்திலான, தொடர்ச்சியான இரு தரப்பு உரையாடல்கள், எல்லை பிரச்னைகளுக்கான தீர்வுகளை விரைவாக முடிவுக்கு கொண்டு வரும். இதன் மூலம், எல்லை தொடர்பான மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்கல்வான் மோதலின் பின் நிலைமையைப் பொறுத்தவரை, இந்த சந்திப்பு ஒரு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. இரு நாடுகளும் உறவுகளை மேலும் நேர்மறையாக நிலைநாட்டும்; புதிய அரசியல் துருவங்களை உருவாக்கும் என நம்பலாம்.

பரிந்துரைகள்

சீனா, நம் நாட்டு எல்லை கட்டமைப்பு மேம்பாடுகளை, ஒரு அச்சுறுத்தலாகக் கருதுகிறது. ஏனெனில், இந்திய- - பசிபிக் பிராந்தியத்தில், சீனாவை கட்டுப்படுத்த, அமெரிக்காவின் ஒரு திட்டமாக, இவற்றைக் காண்கிறது.இதனால், சீனா தொடர்ந்து, தன் எல்லை கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், இந்தியாவின் எல்லையில் சர்ச்சைகளை ஏற்படுத்துவதிலும் ஆர்வம் காட்டி வருகிறது.அதனால் தான், இடியாப்ப சிக்கல் போல், தீர்க்கப்படாத எல்லை பிரச்னை உருவாகியுள்ளது. நம் நாடு, எல்லை கட்டமைப்பின் மேம்பாட்டை, நம் பாதுகாப்பிற்குத் தேவையானதாகவும், இந்திய - அமெரிக்க உறவின் மேம்பாட்டையும், பாதுகாப்பையும் மேம்படுத்தும் என்று கருதுகிறது.சீனாவிடம் இதை எடுத்துச் சொல்ல, இரு தரப்புகளுக்கிடையிலான புரிதல் இடைவெளியையும், நம்பிக்கையின்மையையும் சரிசெய்ய, அரசியல் மட்டத்தில் உரையாடல் நடத்துவது முக்கியம். அஜித் தோவல், இந்த விவகாரத்தைச் சரியாகக் கையாள்வார் என்று நம்பப்படுகிறது.எனவே தான், எல்லைப் பிரச்னைகளுக்கு நீண்டகால தீர்வு மற்றும் இருதரப்பு நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள் இரு நாடுகளுக்கும் முக்கியமானதாக மாறியுள்ளது.எல்லை பிரச்னைகள் மட்டுமின்றி, பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் கலாசார துறைகளில் கூடுதல் ஒத்துழைப்பை ஏற்படுத்தினால், இரு தரப்புக்கும் பல நன்மைகள் உண்டாகும்.

காலத்தின் கட்டாயம்

உலக நாடுகளால் போற்றப்படும் வலிமையான தலைமை, உச்சத்தை எட்டும் முன்னேற்றம், ராஜதந்திரம் மற்றும் வலிமையான ராணுவம், இந்தியாவை உலக அரங்கில் முன்னிலைப்படுத்தி உள்ளது.இந்த கோணத்தில், சீனாவுக்கு நம் நாட்டின் உறவு, தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. ஆகையால், நம் நாட்டோடு கைகோர்ப்பது, சீனாவுக்கு காலத்தின் கட்டாயமாக பார்க்கப்படுகிறது.எனவே, தோவல் பேச்சு நடத்த முன்வந்தபோது, இரு கரம் நீட்டி வரவேற்றது சீனா. பேச்சின் நம்பகமான முன்னேற்றங்களை, இன்னும் சில மாதங்களில் எதிர்பார்க்கலாம் என்று தோன்றுகிறது.- லெப்டினன்ட் கர்னல் என்.தியாகராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Mahendran Puru
டிச 20, 2024 20:18

சிறப்பு மிகச் சிறப்பு. கம்பி கட்டும் கதை மிகச் சிறப்பு.


Ramesh
டிச 20, 2024 19:44

Good good very good... I trust Ajith doval....


RAMAKRISHNAN NATESAN
டிச 20, 2024 14:46

நமது எல்லைப்பாதுகாப்பு கட்டமைப்புகளை நாமே மேம்படுத்துவதில் அமெரிக்காவின் தலையீடு இருப்பதாக சீனா கருதுகிறது என்பதை இந்தியா சொல்வது இந்தியக் குடிமக்களை ஏமாற்றும் வேலை ..... எல்லையில் சமரசம் செய்து கொண்டாலும் மக்கள் பாதுகாப்பு கருதி ஏற்பார்கள் என்ற நம்பிக்கையில் செய்யும் மோசடிப் பிரச்சாரம் ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை