மேலும் செய்திகள்
தேய்பிறை அஷ்டமி காலபைரவருக்கு பூஜை
18-Jul-2025
தலைவாசல், ஆடி மாத, 'நீலகண்டாஷ்டமி' எனும் தேய்பிறை அஷ்டமியை ஒட்டி, தலைவாசல் அருகே ஆறகளூரில் உள்ள காமநாதீஸ்வரர் கோவிலில் நேற்று, காலபைரவருக்கு, பால், நெய், தயிர், மஞ்சள், சந்தனம், தேன் உள்பட, 16 வகை அபி ேஷக பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில் பைரவர் அருள்பாலித்தார். திருமணத்தடை, கடன் பிரச்னை, தோஷம் நீங்க, எலுமிச்சை, பூசணி, தேங்காய்களில் தீபம் ஏற்றி ஏராளமானோர் வழிபட்டனர்.தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் பைரவருக்கு பால், தயிர், சந்தனம் உள்பட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து சுவாமிக்கு சந்தனம், பூக்களால் அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.ஆத்துார் கைலாசநாதர் கோவிலில் உள்ள பிரித்தியங்கிராதேவி மற்றும் ஸ்வர்ண பைரவருக்கு, சிறப்பு பூஜை நடந்தது. புஷ்ப அலங்காரத்தில் தேவி, ஸ்வர்ண பைரவர் அருள்பாலித்தனர். முன்னதாக உலக நன்மை வேண்டி சிறப்பு யாக பூஜை நடந்தது. அதில் வற்றல் மிளகாய் கொட்டி பூஜை செய்யப்பட்டது. தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் சந்தன காப்பு அலங்காரத்தில் கால பைரவர் அருள்பாலித்தார். வீரகனுார் கங்கா சவுந்தரேஸ்வரர், ஆத்துார், கோட்டை காயநிர்மலேஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
18-Jul-2025