2018 சென்றது
புதிய வரவுகளின் சொர்க்கமாக, 2018 இருந்தாலும், பலவற்றுக்கு விடைகொடுப்பதை அறிவிக்கும் ஆண்டாகவும் அமைந்துவிட்டது.கூகுள் இன்பாக்ஸ்: 2014ம் ஆண்டில் அறிமுகம் ஆன ஆப். ஆனால், எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாமல், 2019ம் ஆண்டு மார்ச்சில் இந்த சேவையை முழுமையாக நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது கூகுள்.கூகுள் அலோ: கூகுளின் மெசேஜிங் ஆப். 2016ல் ஆரவாரமாக அறிமுகமானது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன், முழுதாக மூச்சை நிறுத்திக்கொள்கிறது.பேஸ்புக் ஹலோ: 2015ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆண்ட்ராய்டு உபயோகிப்பாளர்களுக்கான ஆப். ஜூலை மாதத்தில் சேவையை நிறுத்தி கொண்டது.கூகுள் பிளஸ்: கூகுள் பிளஸ் சேவையை நிறுத்திக்கொள்ளப்போவதாக, இந்த ஆண்டு அக்டோபரில் அறிவிக்கப்பட்டது. 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகள் கசிந்ததை அடுத்து இந்த நிலை.யாகூ மெசஞ்சர்ஸ்: ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த யாகூ மெசஞ்சர்ஸ், மூடுவிழா காண்கிறது. 1998ம் ஆண்டில் அறிமுகமான சேவை இது.யுடியூப் கேமிங் ஆப்: 2015ம் ஆண்டில் அறிமுகம் செய்யப் பட்டது. வரவேற்பு இல்லாததால், 2019 மார்ச்சில் இந்த ஆப் தன்னுடைய விளையாட்டை நிறுத்திக் கொள்கிறது.