நோக்கியாவின் 3 போன்கள்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, 'நோக்கியா 8.1, நோக்கியா 2.1' மொபைல் போன்கள், ஒருவழியாக விற்பனைக்கு வர உள்ளன. துபாயில், டிச., 5ல் நடக்கும் நிகழ்ச்சியில், இந்த மொபைல் போன்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.இதற்கு அடுத்த நாளே, அதாவது, டிச., 6ல், இந்தியாவில் இந்த மொபைல் போன்களை அறிமுகப்படுத்த, எம்.எம்.டி., குளோபல் முடிவு செய்துள்ளது. இந்தியா மற்றும் துபாயில் நடக்கும் நிகழ்ச்சிகளில், 'நோக்கியா 9' மொபைல் போனும் அறிமுகப்படுத்தப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.சீனாவில் அறிமுகமான, 'நோக்கியா எக்ஸ் 7' மொபைல் போனை, பட்டி பார்த்து, 'நோக்கியா 8.1' என்ற பெயரில் இந்தியாவில் அறிமுகப்படுத்துகின்றனர்.