உள்ளூர் செய்திகள்

நீக்கப்பட்ட 8 லட்சம் செயலிகள்

நடப்பு ஆண்டில் மட்டும், கிட்டத்தட்ட 8 லட்சத்துக்கும் மேற்பட்ட செயலிகளை, 'ஆப்பிள்' மற்றும், 'கூகுள்' நிறுவனங்கள், தங்களுடைய பட்டியலில் இருந்து நீக்கி உள்ளன. இதற்கு காரணம், அவற்றின் தனிநபர் கொள்கை, தரவு பாதுகாப்பு போன்றவற்றில் உள்ள போதாமை ஆகும்.'பிக்ஸலேட்' எனும் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில், நடப்பு ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 8.13 லட்சம் செயலிகள், 'ஆப் ஸ்டோர்' மற்றும், 'கூகுள் பிளே ஸ்டோர்'களிலிருந்து நீக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.கூகுள் பிளேயிலிருந்து நீக்கப்பட்ட செயலிகளில், 86 சதவீத செயலிகளும்; ஆப் ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்ட செயலிகளில் 89 சதவீத செயலிகளும் 12 வயது வரையிலான குழந்தைகளை குறிவைத்து இயங்கி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !