உள்ளூர் செய்திகள்

விலை மலிவான ஸ்மார்ட் வாட்ச்

உள்நாட்டு பிராண்டான, 'பயர் போல்ட்' மிகக் குறைந்த விலையில் ஒரு ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்துள்ளது. இந்த விலையில், மற்ற பிராண்டுகளில், ஒரு ஸ்மார்ட் பேண்டை வேண்டுமானால் வாங்க முடியுமே தவிர, ஸ்மார்ட்வாட்சை வாங்க முடியாது.மிகப் பெரிய டிஸ்பிளே, உலோகத்தால் ஆன தயாரிப்பு என பல அம்சங்களுடன், 'பயர்போல்ட் நிஞ்சா' எனும் பெயரில் வந்துள்ளது. இதற்கு முன், இந்நிறுவனம் பல ஸ்மார்ட் வாட்சுகளை அறிமுகம் செய்த அனுபவம் கொண்டதாகும்.முன்னணி ஸ்மார்ட் வாட்சுகளில் இருக்கும் பெரும்பாலான அம்சங்கள் இந்த வாட்சிலும் இருப்பது கூடுதல் சிறப்பு. ஒரு முறை சார்ஜ் ஏற்றினால், 5 நாட்கள் வரை இதன் பேட்டரி தாக்குப்பிடிக்கும். மூன்று வர்ணங்களில் வந்துள்ளது.விலை: 1,799 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !