இறகு போல் எடையில் ஒரு புதிய இயர்பட்ஸ்
'சோனி' நிறுவனம் இந்தியாவில் புதிதாக, 'ட்ரூலி ஒயர்லெஸ் இயர்பட்ஸ்' ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. லிங்பட்ஸ் எஸ். டபுள்யு.எப்_எல்.எஸ்., 900 என்., எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த இயர்பட்ஸ், மிகவும் எடைகுறைவானதாகவும்; அதிக செயல்திறன் கொண்டதாகவும் இருக்கும் என, சோனி அறிவித்துள்ளது. இந்த இயர்பட்ஸ், மறுசுழற்சி செய்யப்பட்ட அலுமினியம் கொண்டதாகவும்; அதன் 'பேக்கேஜ்' பிளாஸ்டிக் அற்றதாகவும் தயாரிக்கப்பட்டு உள்ளது.