உள்ளூர் செய்திகள்

கூகுள் போட்டோவில் புதிய வசதி

'கூகுள் போட்டோஸ்' புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் வாயிலாக, பயனர்கள் ஒரே மாதிரியான புகைப்படங்களை கண்டுகொள்ளலாம். 'மோர் லைக் திஸ்' எனும் பட்டனை பயன்படுத்துவதன் வாயிலாக, வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு சமயங்களில் எடுக்கப்பட்ட ஒரே மாதிரியான புகைப்படைங்களை தேட முடியும்.இந்த பட்டன், 'ஆடு டூ ஆல்பம்' மற்றும் 'மூவ் டூ ஆர்கிவ்' ஆகியவற்றுக்கு இடையே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் கூகுள் போட்டோவின் 'வெப்' வெர்சனில் 'மெமரீஸ்' எனும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !