உள்ளூர் செய்திகள்

கை கழுவுவதை நினைவுபடுத்தும் ஸ்மார்ட் வாட்ச்

'நாய்ஸ்' நிறுவனம், புதிதாக, 'நாய்ஸ் கலர்பிட் புரோ 3 அசிஸ்ட்' எனும் ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச், 1.55 அங்குலம் டி.எப்.டி., எல்.சி.டி., திரை கொண்டதாகும். வலது பக்கத்தில் ஒரே ஒரு பட்டன் மட்டுமே இருக்கிறது.இதய துடிப்பு, ஆக்சிஜன் அளவு உள்ளிட்டவற்றை அறிந்துகொள்ளலாம். மேலும், கொரோனா பாதுகாப்பை முன்னிட்டு நாம் கை கழுவுவதை இது நினைவுபடுத்தும். ஒரு முறை சார்ஜ் ஏற்றினால், 10 நாட்களுக்கு பயன்படுத்தலாம். இதில், 300 எம்.ஏ.எச்., பேட்டரி உள்ளது.விலை: 5,999 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !