உள்ளூர் செய்திகள்

பதிவை நீக்க கூடுதல் அவகாசம்

'வாட்ஸ்ஆப்' செயலியில், ஒரு பதிவை இட்டபிறகு, அதை 'டெலிட்' செய்துகொள்ளும் வசதி, கடந்த 2017ல் அறிமுகம் செய்யப்பட்டது. துவக்கத்தில் 'டெலிட் பார் எவரிஒன்' வசதியை ஏழு நிமிடங்களுக்குள் பயன்படுத்தினால் உண்டு என்ற நிலை இருந்தது. அதன் பிறகு, ஒரு மணி நேரத்துக்கும் கூடுதலாக அந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டது.தற்போது, பதிவை நீக்கி கொள்வதற்கான அவகாசத்தை, மேலும் நீட்டிக்கும் முயற்சியில் வாட்ஸ் ஆப் இறங்கி உள்ளது. தற்போது பதிவை நீக்கிக்கொள்வதற்கு இருக்கும் 4,096 நொடிகள் அவகாசத்தை, காலவரையறை இன்றி நீட்டிக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த வசதி அறிமுகம் செய்யப்படும்பட்சத்தில் எப்போது வேண்டுமானாலும் நாம் நமது பதிவை நீக்கிகொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !