புதிய அறிமுகங்களுக்கு தயாராகும் ஆப்பிள் வாடிக்கையாளர்கள்
வரும் செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் 'ஆப்பிள்' நிறுவனத்தின் அறிமுக நிகழ்ச்சியில், ஐபோன் 14 சீரிஸ், ஏர்பாட்ஸ் புரோ 2, மூன்று ஆப்பிள் வாட்சுகள் ஆகியவை அறிமுகம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் மாதத்தில் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியை நடத்தும். அந்த வகையில், இந்த ஆண்டு செப்டம்பர் 13ம் தேதியன்று, அறிமுக நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த நிகழ்ச்சி ஆன்லைனில் நடைபெறுமா அல்லது, வெளியே அரங்கில் நடைபெறுமா என்பது தெரியவில்லை.இந்நிகழ்ச்சியின் போது, ஆப்பிளின் ஐபோன் 14 வரிசை ஸ்மார்ட்போன்கள், ஏர்பாட்ஸ் 2புரோ, மூன்று ஆப்பிள் வாட்சுகள் ஆகியவை அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய மேக் சாதனமும் , ஐபேடு, டேப்லெட் ஆகியவையும் அறிமுகம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.