காது கேட்பதற்கான சாதனமாக ஆப்பிள் இயர்பட்சை பயன்படுத்தலாம்
'ஆப்பிள்' நிறுவனத்தின் 'ஆப்பிள் ஏர்பாட்ஸ் புரோ' குறித்த ஆய்வு ஒன்று அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இயர்பட்ஸ் புரோ சாதனத்தை, ஓரளவு காது கேட்பதற்கான சாதனமாகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்கிறது, இந்த ஆய்வு.'ஐ சயின்ஸ் ஜர்னல்' வெளியிட்டுள்ள இந்த ஆய்வறிக்கையில், ஆப்பிள் நிறுவனத்தின் இயர்பட்ஸ் புரோ சாதனத்தை, காது கேட்பதற்கான சாதனமாகவும் பயன்படுத்த முடியும் என்றும், காதுகேட்பதற்கான சாதனங்களின் விலையுடன் ஒப்பிடும்போது, ஏர்பாட்ஸ் புரோ விலை, குறைவு என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இயர்பட்ஸ் புரோவில் உள்ள 'லைவ் லிசன்' வசதியை பயன்படுத்தி, இந்த வாய்ப்பை பெற முடியும் என்கிறது, அந்த கட்டுரை. மேலும், இந்த வசதி காது கேளாமைக்காக தரப்பட்டது இல்லை என்றும் தெரிவித்துள்ளது.ஆப்பிள் இயர்பட்ஸ் சாதனமானது, ஐபோனை ஒரு மைக்ரோபோன் போல மாற்றி, அதிலிருந்து மேம்படுத்தப்பட்ட ஆடியோவை பெறுகிறது. இதனால் செவித் திறன் குறைந்தவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.இதனால் குறைந்த விலையில் இயர்பட்ஸ் புரோ சாதனத்தை, காது கேட்பதற்கான சாதனமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிறது, இந்த ஆய்வுக் கட்டுரை. ஆப்பிள் நிறுவனத்தின் துணை நிறுவனமான 'பீட்ஸ்' நிறுவன இயர்பட்ஸ்களிலும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்கிறது, இந்த ஆய்வு.