உள்ளூர் செய்திகள்

ஆப்பிள் போல்டபிள் போன்

ஒன்றரை லட்சம் ரூபாய் விலையிலான, போல்டபிள் ஸ்மார்ட்போனை, சாம்சங் நிறுவனம் காட்சிப்படுத்திய நிலையில், தற்போது, ஆப்பிள் நிறுவனமும் களத்தில் குதித்துள்ளது. தன்னுடைய போல்டபிள் ஸ்மார்ட்போன் மாடலுக்கான காப்புரிமையை பெற, ஆப்பிள் விண்ணப்பம் செய்துள்ளது. பாதியாகவோ அல்லது மூன்றாகவோ மடிக்கும் வகையில் ஆப்பிள் போன் இருக்கும் என தெரிகிறது. அடுத்த ஆண்டில் அறிமுகம் செய்யப்படலாம் என்கிறார்கள். சீனா, கொரியா நிறுவனங்களை தாண்டி, ஆப்பிளின் போல்டபிள் போனில் என்ன புதுமை இருக்கப்போகிறது என்பது தான் அனைவரது கேள்வியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !