உள்ளூர் செய்திகள்

லைட்னிங் சார்ஜருக்கு விடை கொடுக்கும் ஆப்பிள்

'ஆப்பிள்' நிறுவனம், அதன் 'ஐபோன்' மாடல்களில், 'யு.எஸ்.பி., டைப் சி போர்ட்' வசதியை வெகு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.ஐரோப்பிய நாடுகளில், 2024ம் ஆண்டு முதல், அனைத்து மின்னணு சாதனங்களிலும், யு.எஸ்.பி., டைப் சி போர்ட்டை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என, சட்டம் கொண்டு வரப்பட்டுஉள்ளது.இதையடுத்து, ஆப்பிள் நிறுவனமும் தன் தயாரிப்புகளில், யு.எஸ்.பி., டைப் சி போர்ட்டுகளை அமைக்க முடிவு செய்துள்ளது.இதன் காரணமாக, ஐபோனின் தற்போதைய 'லைட்னிங்' சார்ஜருக்கு, அடுத்த ஆண்டே விடை கொடுக்கப்பட்டுவிடும் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !