ஆப்பிளின் புதிய அறிமுகங்கள்
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில், 'டைம் பிளைஸ்' எனும் நிகழ்ச்சியில், ஆப்பிள் நிறுவனம் தன் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யும். இம்முறையும் பல புதிய சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது.ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6இதற்கு முன் வந்த, 'சீரீஸ் 5' மாடல் மேம்படுத்தப்பட்டு, 'சீரிஸ் 6' அறிமுகம் ஆகி உள்ளது. இதில் மிகவும் சிறப்பாக சொல்லப்படும் அம்சம், நம் ரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜன் அளவை கணக்கிடும் சென்சார் இதில் சேர்க்கப்பட்டுள்ளது தான். கொரோனா காலத்தில் இது மிகவும் தேவையான ஒன்றுதான். மேலும், 'சோலோ லுாப்' எனும் புதிய மாடல் ஸ்ட்ராப்பும் இதில் உள்ளது.விலை, இந்திய மதிப்பில், 40,990 ரூபாயிலிருந்து துவங்குகிறது.ஐபேடு ஏர் (2020)இம்முறை, ஐபேடு ஏர் மற்றும் ஐபேடு (8வது தலைமுறை) ஆகிய இரண்டு ஐபேடுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.ஐபேடு ஏர் (2020) புதிய அம்சங்களுடன் வந்துள்ளது. 10.9 அங்குல லிக்விட் ரெட்டினா திரையுடன் வந்திருக்கும் இந்த ஐபேடு ஏர், கவர்ச்சிகரமான ஐந்து வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 40 சதவீதம் வேகமான சி.பி.யு. கொண்டது. 10 மணி நேரம் தாக்குப் பிடிக்கும் பேட்டரி திறன் கொண்டது.விலை, இந்திய மதிப்பில், 54,990 ரூபாயில் துவங்குகிறது.ஆப்பிள் வாட்ச் எஸ்.இ.,ஆப்பிளின் பட்ஜெட் வாட்ச் இது. விலை குறைவாக இருந்தாலும், இதிலிருக்கும் அம்சங்கள் நிறைவாகவே இருக்கின்றன. இன்னும் சொல்வதென்றால்,'சீரிஸ் 5'க்கு இணையானதாக இருக்கிறது. 'வாட்ச் சீரிஸ் 3' மாடலை விட, மூன்று மடங்கு அதிக வேகமாக இருக்கிறது.விலை, இந்திய மதிப்பில், 29,990 ரூபாயிலிருந்து துவங்குகிறது.ஐபேடு 8வது ஜென்இந்த ஐபேடு, 10.2 அங்குல ரெட்டினா திரையுடன் வந்துள்ளது. 40 சதவீதம் வேகமான சி.பி.யு., இரு மடங்கு வேகமான கிராபிக்ஸ், ஆப்பிள் பென்சில் வசதி ஆகியவற்றை குறிப்பிடத்தக்க அம்சங்களாக சொல்லலாம்.விலை இந்திய மதிப்பில், 29,990 ரூபாயில் துவங்குகிறது.மேலே குறிப்பிட்ட புதிய சாதனங்களுடன்,'பிட்னஸ் பிளஸ்' செயலியையும் அறிமுகம் செய்துள்ளது. மேலும், விரைவில் மேம்படுத்தப்பட்ட ஆப்பிள் இயங்கு தளமும் அறிமுகம் ஆக இருக்கிறது. ஆப்பிள் 12 ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் எதுவும் இந்நிகழ்ச்சியில் அறிவிக்கப்படவில்லை.