உள்ளூர் செய்திகள்

பக்கா பவர் பேங்க்

'அம்பரேன்' நிறுவனம், 50 ஆயிரம் 'மில்லி ஆம்பியர் ஹவர்' பேட்டரி சக்தி கொண்ட, 'பவர் பேங்க்' ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 'அம்பரேன் ஸ்டைலோ மேக்ஸ் பவர் பேங்க்' எனும் பெயரில் அறிமுகம் ஆகியிருக்கும் இந்த பவர் பேங்க், டிஜிட்டல் கேமரா, லேப்டாப் போன்ற பெரிய சாதனங்களுக்கு மிகவும் பயன்படும்.மொபைல் போனை பொறுத்தவரை, பல முறை, முழுமையாக இதிலிருந்து சார்ஜ் ஏற்றிக் கொள்ள முடியும். நீண்ட துார பயணங்களில் மிகவும் பயன் தருவதாக இருக்கும். இந்த பவர் பேங்கில் உள்ள 'சிப்செட்' ஒன்பது லேயர் பாதுகாப்புடன் இருப்பதால், அதிக சூடாவது, 'ஷார்ட் சர்க்யூட்' ஆவது போன்ற பிரச்னைகள் இருக்காது என்கிறது, நிறுவனம்.இதில் இரண்டு யு.எஸ்.பி., ஒரு டைப் சி போர்ட்டுகள் உள்ளன. இதனால், ஒரே சமயத்தில் மூன்று சாதனங்களுக்கு சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம்.விலை: 3,999 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !