போல்ட் ஆடியோவின் புதிய அறிமுகம்
போல்ட் ஆடியோ நிறுவனம், தன் புதிய இயர்போனை அறிமுகம் செய்துள்ளது. போல்ட் ஆடியோ ஓர் உள்நாட்டு நிறுவனமாகும்.'போல்ட் ஆடியோ கர்வ் புரோ' எனும் இந்த இயர்போன், தண்ணீர் புகாத வகையில் தயாரிக்கப்பட்டு,'ஐ.பி.எக்ஸ்.5' தர சான்றிதழும் பெற்றுள்ளது.இது ஒரு ஒயர்லெஸ் இயர்போனாகும். இந்த நெக் பேண்டு இயர்போன், 5.0 புளுடூத் இணைப்பு வசதி கொண்டது. பேட்டரியை பொறுத்தவரை, 12 மணி நேரம் தாக்குப் பிடிக்கும்.குரல் வழி உத்தரவுகளையும் ஏற்கும். காதில் நன்கு பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.இதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் சாதனத்தில், அழைப்புகள் வந்தால், அதிர்வுகள் கொடுத்து கவனம் ஈர்க்கும் அம்சமும் இதில் உள்ளது. 10மி.மீ., டைனமிக் டிரைவர்கள் கொண்ட இந்த நெக் பேண்டின் எடை, 95 கிராம் ஆகும்.விலை: 1,499 ரூபாய்.