60 மணி நேரம் பயன்படுத்தலாம்
'பிடிரான்' நிறுவனம், 'நெக்பேண்டு' இயர்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 'பிடிரான் டேன்ஜென்ட் அர்பன் நெக்பேண்டு' எனும் பெயரில் வந்துள்ள இந்த இயர்போனை, ஒரு முறை சார்ஜ் செய்தால், 60 மணி நேரம் வரை பயன்படுத்தலாம் என்பது தான் ஹைலைட்.இந்த இயர்போன், கேமிங் மற்றும் மியூசிக் ஆகியவற்றுக்கு ஏற்றவாறு தயாரிக்கப்பட்டு உள்ளது. இதில் 400 எம்.ஏ.எச்., பேட்டரி உள்ளது. இரண்டு மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் ஏற்றிவிடலாம்.'ட்ரூ சோனிக் பாஸ் பூஸ்ட்' டெக்னாலஜியுடன் கூடிய 10 மி.மீ., 'டைனமிக் பாஸ் பூஸ்டு' டிரைவர்கள் இதில் உள்ளன. வி5.3 புளுடூத் இணைப்பு வசதி கொண்டு உள்ளது. 'மெட்டாலிக் பினிஷ் ஏ.பி.எஸ்., பாடி' கொண்ட இந்த இயர்போன், 37 கிராம் கொண்டது.'யு.எஸ்.பி.டைப் சி போர்ட்' வாயிலாக விரைவாக சார்ஜ் ஏற்றிக் கொள்ள முடியும். பத்து நிமிடங்கள் சார்ஜ் ஏற்றினால், 4 மணி நேரம் பயன்படுத்தலாம். விலை: 799 ரூபாய்.