கிளப்ஹவுஸ் புதிய வசதி
ஆடியோ உரையாடலுக்கான செயலியான 'கிளப்ஹவுஸ்', அதன் வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதியை உருவாக்கி தந்துள்ளது.உரையாடலை உருவாக்கும் நபர் 'ரீபிளே' எனும் பட்டனை ஆன் செய்யும்பட்சத்தில், அதில் பங்கேற்றவர்கள், உரையாடலை எப்போது வேண்டுமானாலும் ரீபிளே செய்து கேட்கலாம். அத்துடன், புரொபைல் அல்லது கிளப்பில் அதை சேமித்தும் வைக்கலாம்.மேலும், இந்த உரையாடல்களை விரும்பினால் பதிவிறக்கம் செய்து, அதை வேறு ஊடகங்களில் பகிரவும் முடியும் என்பது கூடுதல் சிறப்பு.நிகழ்ச்சி முடிந்த பின்னே முழு உரையாடலையும் கேட்கவோ, பதிவு செய்ய முடியும் என்பது முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டிய விஷயமாகும்.