உள்ளூர் செய்திகள்

சந்தையை கலக்கும் கலர்பிட் வரிசை

பிரபல 'நாய்ஸ்' நிறுவனம், அதன் 'கலர்பிட் புரோ 4' வரிசையில் மூன்றாவதாக, 'கலர்பிட் புரோ 4 ஆல்பா' எனும் ஸ்மார்ட்வாட்சை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.இதற்கு முன்பாக இவ்வரிசையில், 'ரெகுலர்' மற்றும் 'மேக்ஸ்' எனும் வாட்சுகளை அறிமுகம் செய்துள்ளது.இந்த இரு வாட்சுகளை சற்று மேம்படுத்தி, கூடுதல் அம்சங்களை சேர்த்து, புதிய வாட்சை, நாய்ஸ் அறிமுகம் செய்துள்ளது.நாய்ஸ் கலர்பிட் புரோ 4 ஆல்பா ஸ்மார்ட்வாட்ச், தற்போது சந்தையில் உள்ள 'ரியல்மி வாட்ச் 3 புரோ, ஒன்பிளஸ் நார்டு வாட்ச்' போன்றவற்றுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.விலை: 3,799 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !