உள்ளூர் செய்திகள்

டுவிட்டருக்கு போட்டி

அண்மைக் காலமாக 'டுவிட்டர்' நிறுவனத்தின் சேவைகளை பயன்படுத்துவதற்கான விதிமுறைகள் குறித்த அதன் புதிய புதிய அறிவிப்புகள், வாடிக்கையாளர்களை, அதற்கு மாற்றான ஊடகத்தை தேட வைத்துள்ளது.இந்நிலையில் டுவிட்டர் நிறுவனத்தின் துணை நிறுவனர் ஜாக் டோர்ஸி, 'புளூஸ்கை' எனும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளார். இது அழைப்பின் பேரில் வழங்கப்படும் 'பீட்டா' செயலியாக, இப்போது 'ஆப் ஸ்டோர்' வாயிலாக வழங்கப்பட்டு உள்ளது. விரைவில் பொது பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !