உள்ளூர் செய்திகள்

போஸ் ஹெட்போனுக்கு போட்டி

'சோனி டபுள்யு.எச்., 1,000 எக்ஸ்.எம்., 5' எனும் புதிய ஒயர்லெஸ் ஹெட்போனை, சோனி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. முதல் கட்டமாக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து இன்னும் தெரிவிக்கவில்லை. இந்த ஹெட்போன், 'போஸ்' நிறுவனத்தின் 'கொயட்கம்போர்ட் 45' ஹெட்போனுக்கு போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது. சிறப்பம்சங்கள்* 30 மணி நேரம் தாக்குப்பிடிக்கும்* 3 நிமிட சார்ஜில், 3 மணி நேரம் பயன்படுத்தலாம்* குறைவான எடை* 30 மி.மீ., டிரைவர்கள்* நாய்ஸ் கேன்சலிங் வசதி* 8 மைக்ரோபோன்கள்* வாய்ஸ் அசிஸ்டென்ட் இணைப்பு; டச் பேனல்.தோராய விலை: 30,850 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !