டபுள் டக்கர்
விருப்பப்பட்டால், ஸ்மார்ட்போனின் திரையை, இருமடங்கு பெரிதாக்கி கொள்ளும் வகையில், புதிய ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது, எல்.ஜி.,புதிதாக வர இருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் பெயர், இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த போனுக்கு, டிஸ்பிளே உடன் கூடிய ஒரு உறை இருக்கும்.போனை இந்த உறையில் இருக்கும் டிஸ்பிளேவுடன் இணைப்பதன் மூலம், போனின் திரையை எளிதாக இருமடங்காக்கி விடலாம்.இந்த போன் எத்தகைய வரவேற்பை பெறும், என்பது ஒருபக்கம் இருந்தாலும், நல்ல ஐடியா என்பது மட்டும் நிச்சயம்.