உள்ளூர் செய்திகள்

கேலக்ஸி இஸட் போல்டு 2 - 5ஜி முன்பதிவு நாளை துவக்கம்

சாம்சங் நிறுவனத்தின், புதிய போல்டபிள் ஸ்மார்ட் போன் மாடலான, 'கேலக்ஸி இஸட் போல்டு 2 - 5ஜி' போனுக்கான முன்பதிவு, இந்தியாவில் நாளை துவங்குகிறது.சாம்சங்கின் புதிய போல்டபிள் போனான இது, 7.6 அங்குல மெயின் திரை கொண்டதாகும். இதன் கவரில் உள்ள திரை, 6.2 அங்குல அளவு கொண்டதாகும்.இந்த போனுக்கான முன்பதிவை, சாம்சங் இணையதளம் வழியாக வாடிக்கையாளர்கள் செய்துகொள்ள முடியும்.கூடுதல் கட்டணமில்லாத, 12 மாத தவணை திட்டத்திலும் இந்த போனை பெற்றுக்கொள்ள முடியும்.விலை: 1,49,999 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !