கேலக்ஸி டேப் எஸ் 8
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்., 8, கேலக்ஸி டேப் 8 எஸ்., 8 பிளஸ், கேலக்ஸி டேப் எஸ்., 8 பிளஸ்' ஆகியவை அறிமுகம் ஆகியுள்ளன. 'கேலக்ஸி எஸ் 22' வரிசை போன்களை அறிமுகம் செய்த கையோடு இவற்றையும் அறிமுகம் செய்துள்ளது சாம்சங்.உலக சந்தையில், 'கேலக்ஸி டேப் எஸ் 8' விலை 52 ஆயிரத்து, 500 ரூபாயில் துவங்குகிறது. 'கேலக்ஸி டேப் எஸ் 8 பிளஸ்' 63 ஆயிரத்து 300 ரூபாயிலும்; 'கேலக்ஸி டேப் 8 அல்ட்ரா' 82 ஆயிரத்து 300 ரூபாயிலும் துவங்குகிறது.கேலக்ஸி டேப் 8 வரிசையின் விலை மற்றும் இந்தியாவில் எப்போது கிடைக்கும் என்பது போன்ற விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.