உள்ளூர் செய்திகள்

கேமரா ரேட்டிங்கில் கூகுள் போனுக்கு முதலிடம்

'கூகுள் பிக்ஸல் 7' மற்றும் 'பிக்ஸல் 7 புரோ' ஆகிய போன்கள், இந்தியாவில் கடந்த 6ம் தேதியன்று அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், 13ம் தேதி முதல் விற்பனைக்கு விடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தற்போது 'டி.எக்ஸ்.ஓ., மார்க் கேமரா ரேட்டிங்ஸ்' நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி, 'ஐபோன் 14 புரோ' ஸ்மார்ட்போனை விட, பிக்ஸல் 7 புரோ சிறந்த போனாக மதிப்பிடப்பட்டு உள்ளது. கேமரா ரேட்டிங்கில், ஐபோன் 14 புரோ 146 புள்ளிகள் பெற்றிருக்கும் நிலையில், பிக்ஸல் 7 புரோ 147 புள்ளிகள் பெற்றுள்ளது.இந்தியாவில், கூகுள் பிக்ஸல் 7 போனுக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது என்பது, இனிமேல் தான் தெரியவரும்.விலை:கூகுள் பிக்ஸல் 7 : 59,999 ரூபாய்கூகுள் பிக்ஸல் 7 புரோ : 84,999 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !