உள்ளூர் செய்திகள்

விளையாடுவதற்கு ஏற்ற இயர்பட்ஸ்

ஜெர்மனியைச் சேர்ந்த 'ட்ரூக்' நிறுவனம், அண்மையில் சகாயமான விலையில் இயர்பட்ஸ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 'ட்ரூக் பி.டி.ஜி., ஆல்பா' எனும் இந்த இயர்பட்ஸ், கேம்களை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மற்றொரு சிறப்பு, இது யு.எஸ்.பி., டைப் சி சார்ஜிங் வசதி கொண்டது என்பது.வண்ணமயமான வடிவுடன், ஒளிபுகும் வகையில் இதன் 'கேஸ்' மூடி உள்ளதும், கூடுதல் கவர்ச்சிக்காக, ஏழு ஆர்.பி.ஜி., எல்.இ.டி., இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றே.மற்றொரு சிறப்பாக, விளையாடும்போது, 'டைம் டிலே'வை குறைப்பதற்கான தொழில்நுட்பமும் இதில் இடம் பெற்றுள்ளது. இதன் பேட்டரி 48 மணி நேரம் தாக்குப் பிடிக்கும். வெறும் 5 நிமிட சார்ஜிங்கில், 100 நிமிடங்கள் வரை பயன் படுத்திக் கொள்ள இயலும்.விலை: 899 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !