உள்ளூர் செய்திகள்

மரத்தால் ஆன ஹெட்போன்

ஜப்பானை சேர்ந்த 'ஆடியோ டெக்னிக்கா' அதன் 60வது ஆண்டுவிழாவை முன்னிட்டு, புதிதாக 'ஏ.டி.எச் - டபுள்யு.பி., - 2022' எனும் ஒயர்லெஸ் ஹெட்போனை அறிமுகம் செய்துள்ளது.இந்த ஹெட்போனின் சிறப்பு, இது மரத்தால் செய்யப்பட்ட உலகின் முதல் ஒயர்லெஸ் ஹெட்போனாகும். மேலும், ஒயர்லெஸ் சாதனத்தில் 'பேலன்ஸ்டு பில்ட் இன் ஸ்டீரியோ' வசதியையும் முதன் முதலாக வழங்கி உள்ளது. இவை தவிர, ஏகப்பட்ட 'ஹைபை' வசதிகளும் இந்த ஹெட்போனில் இடம்பெற்றுள்ளன.மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இந்த ஹெட்போன் வெளியிடப்படுகிறது. மிகத் தெளிவான ஆடியோவை வழங்குவதை, அடுத்து விலையும் அதிகமாகவே உள்ளது.தோராய விலை: 2.21 லட்சம் ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !