உள்ளூர் செய்திகள்

அதிக விலையிலான டிவி சோனி நிறுவனத்தின் அறிமுகம்

சோனி நிறுவனம், இந்தியாவில் அதன் முதல், '8கே டிவி'யை அறிமுகம் செய்திருக்கிறது. இதுதான் இந்தியாவில் சோனி நிறுவனத்தின் விலை அதிகமான, 'டிவி'யாகும். 'டிவி'யின் அளவு, 85 அங்குலம் ஆகும்.சாம்சங், டி.சி.எல்., ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே, '8கே டிவி'யை அறிமுகம் செய்திருக்கும் நிலையில், அந்த வரிசையில் இப்போது சோனியும், 'இசட் 8 எச்' எனும் டிவியை அறிமுகம் செய்திருக்கிறது. அல்ட்ரா எச்.டி., துல்லியத்துடன் வந்திருக்கும் இந்த டிவியில், வீடியோ கேம்ஸ் விளையாட வசதியாக, பிரேவியா கேமிங் மோடு செட்டிங்ஸ் உள்ளது. குறிப்பாக, சோனியின் தயாரிப்பான, பிளேஸ்டேஷன் பி.எஸ்.,5க்கு தேவையான வசதிகள் கொண்டிருக்கிறது. இந்த டிவி 7680x4320 பிக்ஸல் திரை கொண்டது. மற்றபடி, டால்பி விஷன், டால்பி அட்மோஸ் மற்றும் சோனி அக்கோஸ்டிக் மல்டி ஆடியோ ஸ்பீக்கர் எல்லாம் இருக்கிறது. குரோம்காஸ்ட் உள்ளுக்குள் இணைத்து கொடுக்கப் பட்டிருக்கிறது.விலை: 13,99,990 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !