எச்.பி., போல்டபிள் லேப்டாப்
எச்.பி., நிறுவனம், 17 அங்குல ஓ.எல்.இ.டி., திரை கொண்ட, புதிய லேப்டாப் தயாரிப்பில் இறங்கி உள்ளது. இதில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம், இந்த ஓ.எல்.இ.டி., திரையானது மடிக்க கூடிய வகையில் இருக்கும் என்பது தான். 'போல்டபிள்' ஸ்மார்ட்போன் என்பது போல, போல்டபிள் லேப்டாப் இது.இந்த ஆண்டின் இறுதியில், இந்த லேப்டாப் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 17 அங்குல லேப்டாப்பை, எளிதாக 11 அங்குலமாக மடித்துக் கொள்ளலாம். இந்த லேப்டாப்பின் டிஸ்ப்ளே,'4கே' துல்லியத்துடன் இருக்கும். அத்துடன், 'டச் ஸ்கிரீன்' வசதியும் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.போல்டபிள் லேப்டாப் என்பது இன்னும் சந்தைக்கு புதிய ஒன்றாகவே கருதப்படுகிறது. இவ்வகையிலான லேப்டாப்புகளை 'அசுஸ், லெனோவா' ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே அறிமுகம் செய்துள்ளன.