உள்ளூர் செய்திகள்

புதிய அவதாரத்தில், டொமகொச்சி

நீங்கள், தொண்ணுாறுகளில் சிறுவர்களாக இருந்தவர்கள் எனில்,'டொமகொச்சி' வீடியோ கேம் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஏனெனில், 90களில் ஜப்பானின் தயாரிப்பான,'டொமகொச்சி' வீடியோ கேம் அவ்வளவு பிரபலம். முட்டை வடிவத்தில் இருக்கும் சாதனத்தில், வீடியோ கேம் விளையாடலாம். கிட்டத்தட்ட பழைய, கறுப்பு-வெள்ளை திரையுடன் கூடிய நோக்கியா போனில் இருக்கும் கேம்களை போன்றதுதான் இதுவும்.இந்த முட்டை வடிவ சாதனத்தை, கீ செயின் போல எதிலும் கோர்த்துக்கொள்ளலாம். கைக்கு அடக்கமான இந்த வீடியோ கேம் பிளேயரை, எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம் என்பதுஅப்போது இருந்த சிறப்புகளாகும்.இப்போது 25 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அதை கொண்டாடும் விதமாக, புதுமை அம்சங்களுடன் சந்தைக்கு வந்துள்ளது. இம்முறை ஸ்மார்ட் வசதிகளுடன். அத்துடன், வாட்ச் வடிவில்.இந்த புதிய அறிமுகத்தில் 'மைக்ரோபோன், டச் ஸ்கீரின்' போன்ற வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் ஸ்மார்ட் வாட்சின் அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !