உள்ளூர் செய்திகள்

சென்ஹைசர் ஹெட்போன் அறிமுகம்

'சென்ஹைசர்' நிறுவனம், இந்தியாவில், புதிய ஹெட்போனை அறிமுகம் செய்துள்ளது. 'சென்ஹைசர் எச்.டி., 25' எனும் இந்த ஹெட்போன், இந்தியாவில், 'புளூ லிமிடெட் எடிசன்' ஆக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே, இந்தியாவில் அறிமுகம் ஆகியிருக்கும் இதில், நீல வண்ணத்தில் இயர்பேடுகள் இருக்கின்றன.அதிக சப்தமுள்ள இடங்களில் இது மிகச் சிறப்பாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதனால், கேமராமேன் டி.ஜே., ஆகியோருக்கு, இந்த ஹெட்போன் மிக வசதியாக இருக்கும்.இந்த நீலவண்ண, ஸ்பெஷல் எடிசன் ஹெட்போனின் விலை 8,499 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !