கேலக்ஸி எஸ் 22 அறிமுகம்
'சாம்சங்' நிறுவனம், அதன் 'கேலக்ஸி எஸ் 22' வரிசை ஸ்மார்ட்போன்களை, கடந்த செவ்வாய் அன்று உலகம் முழுக்க அறிமுகம் செய்தது. கடந்த ஆண்டை போலவே, இப்போதும், மூன்று எஸ் வரிசை ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்துள்ளது.'கேலக்ஸி எஸ் 22, கேலக்ஸி எஸ் 22 பிளஸ், கேலக்ஸி எஸ் 22 அல்ட்ரா' என மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சாம்சங் நிறுவனம் இந்த புதிய போன்களின் சார்ஜிங் வேகத்தை அதிகப்படுத்தி உள்ளது.இந்த போன்கள் இம்மாதம் 25ம் தேதி முதல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், விலை குறித்த விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.