உள்ளூர் செய்திகள்

கூகுள் பிக்ஸல் 5 செப்டம்பரில் அறிமுகம்

அண்மையில் கூகுள் நிறுவனம், அதன், பிக்ஸல் 4 ஏ போனை அறிமுகம் செய்திருந்த நிலையில், அடுத்து செப்டம்பர் 30ம் தேதியன்று, பிக்ஸல் 5 மற்றும் பிக்ஸல் 4 ஏ 5ஜி போன்கள் அறிமுகம் ஆகும் என தெரிகிறது. இதற்கு முன், இந்த ஆண்டின் இறுதியில் அறிமுகம் ஆகும் என எதிர்பார்த்திருந்த நிலையில், இப்போது சற்று முன்னதாகவே அறிமுகம் ஆகும் என தெரியவந்துள்ளது.பிக்ஸல் 5 பச்சை, கறுப்பு என இரண்டு வண்ணங்களிலும், பிக்ஸல் 4ஏ 5ஜி போன் கறுப்பு கலரிலும் அறிமுகம் ஆகும் என சொல்லப்படுகிறது.பிக்ஸல் 5 போன், 8ஜி.பி. ரேமுடன், ஸ்நாப்டிராகன் 765ஜி எஸ்.ஓ.சி.,இயங்கு தளமும் கொண்டதாக இருக்கும். மேலும், ஆண்ட்ராய்டு 11ல் இயங்கும் என தெரிகிறது. இதில் சுவாரஸ்மான விஷயம், ஒன்பிளஸ் நோர்டு போனும் இதே பிராசஸரில் தான் இயங்குகிறது.பிக்ஸல் 5 போனின் திரை, 5.8 அங்குலம் கொண்டதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !