இந்தியாவில் அறிமுகம் ஆகிறது கூகுள் பிக்ஸல் 6 ஏ
'கூகுள்' நிறுவனத்தின் தயாரிப்பான, 'கூகுள் பிக்ஸல் 6 ஏ' ஸ்மார்ட்போன், இந்தியாவில் எப்போது அறிமுகம் ஆகும்; அதன் விலை என்ன என்பது போன்ற தகவல்கள் இணையதளங்களில் கசிந்துள்ளது.இதன் விலை, இந்தியாவில் 40 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் இருக்கலாம் என கூறப்படுகிறது. அனேகமாக ஜூலை மாத இறுதியில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. இருப்பினும், கூகுள் நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.சிறப்பம்சங்கள்* ஆண்ட்ராய்டு 12* 6.1 அங்குல முழு எச்.டி., திரை* 128 ஜி.பி., சேமிப்பு வசதி* 5 ஜி இணைப்பு* யு.எஸ்.பி., டைப் சி போர்ட் வி 5.2 புளுடூத்* 4,410 எம்.ஏ.எச்., பேட்டரி