உள்ளூர் செய்திகள்

ஜேஸ் ஹெட்போன்

சுவீடன் நாட்டை சேர்ந்த, 'ஜேஸ்' நிறுவனம், இந்தியாவில் அதன் புதிய ஹெட்போனை அறிமுகம் செய்துள்ளது. 'ஜேஸ் ஏ செவன்' எனும் இந்த ஹெட்போன், ஒயர்லெஸ் ஹெட்போன் ஆகும். ஒரு சார்ஜில், 25 மணி நேரம் தாக்குப்பிடிக்கும். போன் அழைப்புகளை ஏற்கும் வசதியும் இருக்கிறது. காதுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. ப்ளூடூத் வசதியும் இருக்கிறது. கறுப்பு, ரோஸ், பச்சை, சாம்பல், எனப் பல வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த ஹெட்போன் சென்ஹிஸர் எச்.டி.4.40 பி.டி., மார்ஷேல் மேஜர் ப்ளூடூத், ஸ்கல்கேண்டி ஹெஷ் 3 ஒயர்லெஸ் ஆகியவற்றுக்கு போட்டியாக களம் இறக்கப்பட்டுள்ளது.விலை 7,999 ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !