ஜெப் யோகா 3
ஒரு முறை சார்ஜ் ஏற்றினால், கிட்டத்தட்ட 17 மணி நேரம் தொடர்ந்து பயன்படுத்தும் வகையிலான பேட்டரி சக்தியுடன் கூடிய இயர்போனை, 'ஜெப்ரானிக்ஸ்' நிறுவனம், இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.'ஜெப் யோகா 3' எனும் பெயரில், இந்த நெக்பேண்டு இயர்போன் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த இயர்போன், 14 மி.மீ., டிரைவர்கள் மற்றும் 27 கிராம் எடை கொண்டதாகும்.இதை, 10 நிமிடம் சார்ஜ் ஏற்றினால், 8 மணி நேரம் வரை பயன்படுத்தலாம். முற்றிலும் சார்ஜ் ஏற்றினால், 17 மணி நேரம் பயன்படுத்தலாம். நான்கு வண்ணங்களில் வந்துள்ளது.விலை : 1,899 ரூபாய்