உள்ளூர் செய்திகள்

ஜூக் பாக்ஸ்

டச் ஸ்கிரீன், வாய்ஸ் கமன்ட் எல்லாம் வந்த பின், பாடல்கள் கேட்பது வேறு லெவலுக்கு சென்று விட்டது. இந்நிலையில், கிறிஸ் பேட்டி என்பவர் தன் தந்தைக்கு, கிறிஸ்துமஸ் பரிசு ஒன்றை தன் கையால் செய்து கொடுக்க விரும்பினார். இதையடுத்து, அந்த காலத்தில் இருந்ததை போல, ஜூக் பாக்ஸ் ஒன்றை செய்து கொடுத்து, அசத்தி இருக்கிறார்.கிறிஸ் பேட்டி செய்த ஜூக் பாக்சில், ஒரு சிறிய மாற்றம்... கிரெடிட் கார்டை போல இருக்கும் கார்டுகளை தேய்த்தால், பாடலை கேட்கலாம். ஒவ்வொரு ஆல்பத்துக்கும் தனி தனி கார்டுகள். ஒவ்வொரு கார்டுக்கும் தனி தனி ஐடி.தன்னுடைய படைப்பை அவர் டுவிட்டரில் போட, ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ். இதையடுத்து, தன்னுடைய சாப்ட்வேரை, அனைவரும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், ஒப்பன் சோர்சில் போடுவதற்கான வேலையில் இறங்கி இருக்கிறார். இனி அதை வைத்து, அவரவர்கள் தங்களுக்கான, ஜூக் பாக்ஸை தயார் செய்து கொள்ளலாம்.நல்ல ஐடியா; நல்ல உள்ளம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !