உள்ளூர் செய்திகள்

சிறகு விரிக்கும் எல்.ஜி., போன்

எல்.ஜி., நிறுவனத்தின் புதிய மாடல் போன் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன. மடக்கி நீட்டக்கூடிய வகையில், இந்த 'போல்டபிள் போன்' இருக்கிறது. இதில் கூடுதல் சிறப்பு, இந்த போன் ஆங்கில,'டி' வடிவத்தில் இருப்பது தான்.இந்த போனுக்கு, 'எல்.ஜி., விங்' என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. ஆனால், நிறுவனம் இந்த போன் குறித்து இதுவரை வாயே திறக்கவில்லை.இந்த போன்,'டி' வடிவத்தில் இருப்பதால், இரு வேறு செயல்பாடுகளை ஒரே சமயத்தில் மேற்கொள்ள இயலும். உதாரணமாக, காரில் செல்லும்போது, நீள்வாட்டில் இருக்கும் பிரதான திரையில், செல்லும் இடத்துக்கான வரைபடத்தை வைத்துக் கொண்டால், பக்கவாட்டில் இருக்கும் திரையில், இசை கேட்பதற்கான மீடியா பிளேயரை வைத்துக் கொள்ள முடியும்.அல்லது, அழைப்பு களை மேற்கொள்ள பயன்படுத்திக் கொள்ள முடியும். இதனால், வரைபடத்தை பார்த்து வாகனத்தை செலுத்துவது பாதிக்காது. இந்த போனில், பக்கவாட்டில் இருக்கும் திரையானது, பிரதான திரையில் பாதியளவே உள்ளது. பிரதான திரை, 6.8 அங்குலம் அளவு கொண்டதாகவும்; சிறிய திரை, 1.1 அங்குல திரை கொண்டதாகவும் இருக்கிறது.எப்போது இந்த போன் அறிமுகம் செய்யப்படக்கூடும் என்பது குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !