உள்ளூர் செய்திகள்

எல்.ஜி.,யின் மிகப் பெரிய டிவி

எல்.ஜி., நிறுவனம், அதன் ஓ.எல்.இ.டி., டிவி வரிசையில், புதிய டிவிகளை அறிமுகம் செய்துள்ளது. எல்.ஜி., நிறுவனத்தின், இதுவரை இல்லாத மிகப் பெரிய அளவிலான ஓ.எல்.இ.டி., டிவியும் இதில் அடக்கம்.இந்த ஓ.எல்.இ.டி., டிவி வரிசையில், 97 அங்குல அளவில் மிகப் பெரிய டிவியை அறிமுகம் செய்துள்ளது. மேலும், இதே வரிசையில் சிறிய அளவிலான 42 அங்குல டிவியும் அறிமுகம் ஆகியுள்ளது.இந்த புதிய டிவிகள், நிறுவனத்தின் 'ஏ9' பிராஸசர் கொண்டிருப்பதாகவும், இதனால் மேம்பட்ட செயல்திறனை கொண்டதாக இருக்கும் என்றும் எல்.ஜி., நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இதில் நிறுவனத்தின் 'இவோ' எனும் பேனல் இருப்பதால், மேம்பட்ட பிரைட்னெஸ், வெப்ப நிர்வகிப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிய ஜி மற்றும் சி ஓ.எல்.இ.டி., டிவி வரிசையில், 97,83,77,65,55,48,42 அங்குல அளவுகளில் டிவிகள் அறிமுகம் ஆகியுள்ளன. விரைவில் இவை விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !