லாஜிடெக்கின் கேமிங் மவுஸ்
'லாஜிடெக் ஜி புரோ ஒயர்லெஸ் கேமிங் மவுஸ்' இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இதற்கு முன் வந்த, 'லாஜிடெக் ஜி புரோ ஒயர்டு மவுஸ்'ன் மேம்படுத்தப்பட்ட தயாரிப்பாகும். இப்போது வந்திருப்பது, ஒயர்லெஸ் மாடலாகும்.எடை குறைவான இந்த மவுசில், நிறுவனத்துக்கு சொந்தமான, 'ஹீரோ 25 கே சென்சார்' இடம்பெற்றுள்ளது. இந்த மவுசை, 'விண்டோஸ் 7' அல்லது அதற்கும் மேம்பட்டவை மற்றும் 'மேக் ஓ.எஸ்., 10.11' அல்லது அதற்கு அடுத்து வந்தவைகளில் பயன்படுத்தலாம்.இந்த மவுசின் பேட்டரி, 'ஆர்.ஜி.பி., லைட்டிங்' வசதியுடன் 48 மணி நேரமும், லைட்டிங் இல்லாமல் 60 மணி நேரமும் தாக்குப்பிடிக்கும்.விலை: 10,995 ரூபாய். அறிமுக சலுகைகளும் உள்ளன.