உள்ளூர் செய்திகள்

லாஜிடெக்கின் காம்போ

'லாஜிடெக்' நிறுவனம் இந்தியாவில், 'லாஜிடெக் எம்.கே.470 ஸ்லிம் ஒயர்லெஸ் கீபோர்டு மற்றும் மவுஸ் காம்போ'வை அறிமுகம் செய்துள்ளது. கீபோர்டு, மவுஸ் ஆகிய இரண்டும், ஸ்லிம் ஆகவும்; சிறிய வடிவிலும் உள்ளன.இரண்டு வண்ணங்களில் இவை அறிமுகம் ஆகியுள்ளன. சிறிய யு.எஸ்.பி. ரிசீவர் வாயிலாக, லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் உடன் இவற்றை இணைத்துக் கொள்ளலாம். கீபோர்டு, மவுஸ் இரண்டும், பேட்டரியில் இயங்கக்கூடியவை. கீபோர்டில் மூன்று ஆண்டுகள் வரையிலும் மவுசில் ஒன்றரை ஆண்டுகள் வரையிலும், பேட்டரி தாக்குப்பிடிக்கும். விலை : 4,995 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !