உள்ளூர் செய்திகள்

மெகா சைஸ் பவர் பேங்க்

சாதாரண போன், ஸ்மார்ட்போன் ஆன பின், அதன் பேட்டரி ஒரு பிரச்னையாகிவிட்டது பலருக்கு. அதனால் வேறு வழியில்லாமல், கையோடு பவர்பேங்க் ஒன்றையும் எடுத்துச் செல்லும் நிலை ஏற்பட்டு விட்டது. அதிலும் இப்போதெல்லாம் 10 ஆயிரம் அல்லது 20 ஆயிரம் எம்.ஏ.எச்., திறன் கொண்ட பவர்பேங்க் தேவைப்படுகிறது.இந்நிலையில், பவர்பேங்கின் தேவையால் வெறுத்துப் போன சீனாவை சேர்ந்த ஒருவர், 'மெகா பவர்பேங்க்' ஒன்றை தனக்காக தயார் செய்துள்ளார். அதன் திறன் எவ்வளவு தெரியுமா? 2.70 கோடி எம்.ஏ.எச். ஒரே சமயத்தில் 20 வகையான மின்னணு சாதனங்களுக்கு இதில் சார்ஜ் ஏற்றலாம். அதுமட்டுமல்ல; அதிக வோல்ட் வசதியுடன் கூடிய இந்த பவர் பேங்கை பயன்படுத்தி, 'டிவி, வாஷிங் மிஷின், இண்டக் ஷன் ஸ்டவ்' போன்றவற்றையும் உபயோகிக்கலாம்.எல்லாம் சரிதான். ஆனால் இந்த பவர்பேங்கை வெளியில் எடுத்து செல்லலாம் என்றால், அதற்கு தனியாக ஒரு வேன் தேவைப்படும் என்பது தான் பெரிய பிரச்னை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !